ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கார்ல்சனின் ஆட்டமும், ஆனந்தின் எதிர்காலமும்.

சென்னையில் நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்பட்டப் போட்டியில் வெற்றிபெற்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுக்கு சம்பிரதாய ரீதியிலான ஒரு நிகழ்ச்சியில் உலக சாம்பியன் பட்டமும் சுமார் பத்து கோடி இந்திய ரூபாய் பரிசுப் பணமும் திங்கட்கிழமை(25.11.13) வழங்கப்பட்டன.

Image caption உலக சதுரங்கப் பட்டத்தை வென்ற கார்லசனுக்கு பட்டமும் பரிசும் தமிழக முதல்வரால் வழங்கப்பட்டது.

உலக சதுரங்கப் பட்டத்துக்கான இந்தப் போட்டியின் மிகவும் முக்கியமான ஒன்பதாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் தவறான ஒரு நகர்வினால் அதை அவர் இழந்தார் என்று, இந்தியாவின் முதல் சதுரங்க கிராண்ட் மாஸ்டரான மானுவேல் ஆரோன் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

இப்போட்டிக்கு பிறகு ஆனந்தின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. நடைபெற்று முடிந்த போட்டி, கார்ல்சனின் ஆட்டம், ஆனந்தின் எதிர்காலம் ஆகியவை தொடர்பில் மானுவேல் ஆரோனின் பேட்டியை இங்கே கேட்கலாம்.