முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் கம்ப்ளிக்கு மாரடைப்பு

Image caption வினோத் கம்ப்ளி

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் கம்ப்ளி மாரடைப்பு ஏற்பட்டு இன்று மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 41 வயதான இவருக்கு கடந்த வருடம் ஏஞ்சியோபிலாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஐசியு அதாவது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை மோசமாக இல்லை என்றும் அவரது மனைவி மும்பை பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் பள்ளிக்கூட நண்பரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 14 டெஸ்ட் இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.