அபார மனிதரின் அரிய தங்கப் பதக்கம் ஏலத்தில் போனது

மிகவும் சர்ச்சைக்குரிய பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன்ஸ் வென்ற ஒரு தங்கப் பதக்கம் சுமார் ஒன்றரை மில்லியன் டாலருக்கு ஏலம் போயுள்ளது.

1936 ஆம் ஆண்டு, ஜெர்மனி, ஹிட்லரின் ஆட்சியின் கீழ் இருந்தபோது, நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கறுப்பின அமெரிக்கரான ஜெஸ்ஸி ஓவன்ஸ் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார்.

அந்த ஒலிம்பிக் போட்டியில் ஜெஸ்ஸி ஓவன்ஸின் ஓட்டத்தை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.