36 பந்துகளில் சதம் அடித்தார் கொரே அண்டர்சன்

  • 1 ஜனவரி 2014
கோரி அண்டர்சன்
Image caption கோரி அண்டர்சன்

சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையை நியுசிலாந்தின் கொரே அண்டர்சன் செய்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக குயின்ஸ்லாண்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் கொரே அண்டர்சன் சதம் அடித்தார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் ஷகித் அப்ரிதி 37 பந்துகளில் 1996 ஆம் ஆண்டில் அடித்த சதமே உலக சாதனையாக இருந்து வந்தது.

ஆட்ட நேர முடிவில் 23 வயதான அண்டர்சன் 131 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிரடியாக ஆடிய இவர் 14 சிக்சர்களையும், 6 பவுண்டரிகளையும் அடித்துள்ளார்.

இரவு விடுதியில் தாக்கப்பட்ட கோமா நிலைக்கு சென்று திரும்பிய ஜெஸ்சி ரைடர் 51 பந்துகளை எதிர்கொண்டு 104 ரன்களை அடித்தார். இந்த இருவரின் அதிரடி ஆட்டத்தால் 21 ஒவர்களில் நியுசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்களை எடுத்திருந்து.

அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 21 ஒவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களே எடுக்க முடிந்தது.