ஹாக்கி இந்தியாவுக்கு இந்திய அரசு மீண்டும் அங்கீகாரம்

ஹாக்கி இந்தியா சின்னம் படத்தின் காப்புரிமை hockeyindia.org
Image caption ஹாக்கி இந்தியா சின்னம்

ஹாக்கி இந்தியா அமைப்புக்கு இந்திய நடுவண் அரசாங்கம் தேசிய விளையாட்டுச் சம்மேளத்தின் அங்கீகாரத்தை தற்போது வழங்கியுள்ளது.

இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை இந்தியாவுக்குள் நிர்வகிக்கின்ற ஒரே அமைப்பாக வர வேண்டும் என முயன்று வரும் ஹாக்கி இந்தியா அமைப்புக்கு இது ஒரு ஊக்கம் தருகின்ற முன்னேற்றமாக அமைந்துள்ளது.

அரசாங்க விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை, அமைப்புக்குள் தகராறுகளும், நிர்வாக முறைகேடுகளும் இருக்கின்றன் என்பது போன்ற காரணங்களுக்காக ஹாக்கி இந்தியா அமைப்பின் அங்கீகாரத்தை இந்திய விளையாட்டு அமைச்சகம் 2012ஆம் ஆண்டில் ரத்து செய்திருந்தது.

ஆனால் இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கின்ற மற்றும் நிர்வகிக்கின்ற ஒரே அமைப்பாக தற்போது அரசாங்கத்தினால் அது மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஹாக்கி என்பது இந்தியாவில் முக்கிய விளையாட்டாகவும், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தரும் ஒரு விளையாட்டாகவும் இருப்பதால் அவ்விளையாட்டுக்கென ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு இல்லை என்ற நிலையை சீக்கிரம் அகற்ற வேண்டும் என்ற நோக்கில் ஹாக்கி இந்தியா அமைப்புக்கு இந்த அங்கீகாரத்தை இந்திய விளையாட்டு அமைச்சகம் வழங்கியுள்ளது.