இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மாவன் அத்தபத்து

படத்தின் காப்புரிமை AFP
Image caption மாவன் அத்தபத்து

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மாவன் அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து நடக்கவுள்ள அயர்லாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்க நாடுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணங்களுக்காக இந்த நியமனம் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நியமனம் தமக்கு கிடைத்த பெரும் கௌரவம் என்று மாவன் அத்தபத்து பிபிசியிடம் கூறினார். கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அணித் தலைவராக இருக்கக் கிடைத்தமை பெரும் பாக்கியம் என்றும் அத்தபத்து தெரிவித்தார்.

முன்னாள் வீரர் ருவன் கல்பகே தற்காலிக உதவி பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.