ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆசிய கிரிக்கெட் திறமைகளை தெருக்களில் தேடும் இங்கிலாந்து

Image caption கிரிக்கெட் கழகங்களுக்கு வெளியே உள்ளூர் மைதானங்களில் விளையாடும் பிரிட்டிஷ்- ஆசிய இளைஞர்களை ஊக்குவிக்கத் திட்டம்

இங்கிலாந்தில் பிரிட்டிஷ்-ஆசிய சமூகத்தவர்களிடம் காணப்படும் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமைகளையும் பயன்படுத்தி, அந்த சமூகங்களிலிருந்து நாட்டுக்கான முதற்தர கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து- வேல்ஸ் கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது.

தெருக்களிலும் உள்ளூர் மைதானங்களிலும் கிரிக்கெட் விளையாடும் ஆசிய இளைஞர்களைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு மேலும் பயிற்சியளிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் வாழ்கின்ற ஆசிய சமூகத்தவர்களில் மூன்றில் ஒருவர் கிரிக்கெட் விளையாட்டில் நாட்டம் உள்ளவர்கள் என்று புதிய புள்ளிவிபரம் ஒன்றில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுபற்றிய பிபிசியின் செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.