உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு இரண்டாவது தோல்வி

படத்தின் காப்புரிமை Getty
Image caption பெருத்த ஏமாற்றத்தில் இங்கிலாந்து ரசிகர்கள்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-1 எனும் கணக்கில் உருகுவே அணியிடம் தோல்வியடைந்துள்ளது.

ஆரம்பகட்ட ஆட்டங்களில் இங்கிலாந்து அணி அடைந்துள்ள இரண்டாவது தோல்வி இது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption உருகுவேயின் வெற்றியை உறுதி செய்த லூயிஸ் சுவாரஸ்( நீல வண்ண உடையில்)

சாவ் பாலோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உருகுவே அணியின் இரண்டு கோல்களையும் நட்சத்திர ஆட்டக்காரர் லூயிஸ் சுவாரஸ் அடித்தார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption உற்சாகத்தில் உருகுவே ரசிகர்கள்

இங்கிலாந்து அணியின் ஒரே கோலை வேயின் ரூனி அடித்தார்.

இந்த இரு அணிகளும் இப்போட்டியில் தமது முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தன.

இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த உலகக் கோப்பை போட்டியின் அடுத்த சுற்றுக்கு அவர்கள் முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது, அவர்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகள் பெறும் வெற்றி-தோல்வியை பொறுத்தே அமையும்.