கால்பந்து விளையாட்டில் காட்டுமிராண்டித்தனம்

உருகுவே நாட்டு கால்பந்து வீரர் லூயிஸ் சுவாரஸ் மீது சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கையை விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கடித்தவரும், கடிவாங்கியவரும்

நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் அந்த அணியைச் சேர்ந்த ஜியார்ஜியோ சிலீனியை கடித்துவிட்டபோதிலும், ஆட்ட நடுவர் நடவடிகை ஏதும் எடுக்காததாலேயே, ஃபிஃபாவின் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணை அறிக்கையின் முடிவு எதிர்வரும் சனிக்கிழமை உருகுவே-கொலம்பியா ஆட்டத்துக்கு முன்பாக வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கடிகாயத்துக்கு உள்ளான ஜியார்ஜியோ சிலீனி

கடந்த செவ்வாய்கிழமை இத்தாலிக்கு எதிரான போட்டியின் 80 ஆவது நிமிடத்தில், சுவாரஸ் ஜியார்ஜியோ சிலீனியின் தோள்பட்டையின் கடித்துவிட்டார்.

இதற்கு முன்னரும் அவர் இருவேறு போட்டிகளில் எதிரணியின் வீரர்களை இவ்வாறு கடித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டிகளின் போது செல்சீ அணியின் வீரர் பிரானிஸ்லாவ் இவானோவிச்சின் கைகளில் கடித்ததற்காக, சுவாரஸுக்கு 10 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Reproducao
Image caption வர்த்தக அனுரசணை வழங்கும் நிறுவனத்தின் அறிவிப்பு

இப்போது அவர் குற்றவாளி என்று கருதப்பட்டால் அவருக்கு 24 போட்டிகளில் விளையாடத் தடையோ அல்லது இரண்டு வருடத் தடையோ விதிக்கப்படக் கூடும்.

இதனிடையே அவருக்கு வர்த்தக அனுசரணை வழங்கும் நிறுவனம், அவருடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது.