உருகுவேயை வென்று காலிறுதிக்கு கொலம்பியா தகுதி

படத்தின் காப்புரிமை AFP
Image caption கடும் போட்டியில் கொலம்பிய(மஞ்சள்) உருகுவே(நீலம்) வீரர்கள்

சிறிய தென் அமெரிக்க நாடான கொலம்பியா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.

காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் கொலம்பியா, மற்றொரு சிறிய தென் அமெரிக்க நாடான உருகுவேயை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற இந்தப் ஆட்டத்தில் கொலம்பிய அணியின் இரண்டு கோல்களையும் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அடித்தார். முதல் கோல் 28 ஆவது நிமிடத்திலும், அடுத்தது 50 ஆவது நிமிடத்திலும் வந்தது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இரண்டு கோல்களை அடித்த ஜேம்ஸ் ரோட்ரிகஸ்

ஆடுகளத்தில் கண்ணியமில்லாத வகையில் நடந்து கொண்டார் என்பதற்காக ஒன்பது போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ், இந்தப் போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவர் அணியில் இல்லாதது உருகுவேயிக்கு ஒரு பின்னடைவு என்று பிபிசியின் கால்பந்து வர்ணனையாளர்கள் கூறுகிறார்கள்.

உருகுவே அணியை வென்றுள்ள கொலம்பியா, காலிறுதியில் பிரேசில் அணியை எதிர்கொள்ளும்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption கொலம்பிய வீரர்கள்

பிரேசில்-உருகுவே மோதும் முதல் காலிறுதிப் போட்டி, ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும்

கொலம்பிய அணி முதல் முறையாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.