பிரேசில் உலகக் கோப்பை ஒரு பார்வை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகக் கோப்பை-சிறிய அணிகள் சாதித்தது எப்படி?

படத்தின் காப்புரிமை AP
Image caption கொலம்பிய அணியின் ரசிகர்கள்

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை பிரேசில், கொலம்பியா, கோஸ்ட்டாரிக்கா மற்றும் நெதர்லாந்து அதற்கு தகுதி பெற்றுள்ளன.

மேலும் நான்கு அணிகள் தகுதிபெறவுள்ளன.

முதல் காலிறுதி ஆட்டங்கள் ஜூலை மாதம் நான்காம் தேதி நடைபெறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty
Image caption கடும் அழுத்தத்தில் பயிற்சியாளர்கள்

இந்தக் காலப்ந்து போட்டியில் கோஸ்ட்டாரிக்கா, கொலம்பியா போன்ற சிறிய நாடுகள் மிகச்சிறப்பாக ஆடி தமது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளன என்கிறார், கால்பந்து பயிற்சியில் சர்வதேசப் பட்டயம் பெற்றுள்ளவரும், பயிற்சியாளருமான ராபின் சார்லஸ் ராஜா.

சிறிய அணிகள் தமது திறமைகளை மிகவும் சிறப்பாக ஒருங்கிணைத்து விளையாடி வருவதால், பெரிய அணிகள் என்று கருதப்படும் அணிகளுக்கு கூட கடும் சவால்களாக விளங்குகிறார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரோனால்டோ போன்ற பெரிய வீரர்கள் சோபிக்கவில்லை

ஆப்ரிக்க அணிகளும் இம்முறை நன்றாக விளையாடியுள்ளனர் என்று கூறும் அவர், கோல் காப்பாளர்களைப் பொருத்தவரையில், மெக்ஸிகோ அணியின் காப்பாளர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார் என்றும் கூறுகிறார்.

ஆடுகளத்தில் பந்தை மற்றொருவரிடம் தள்ளி ஆடுவதில் ஜெர்மனி பெரிய சாதனை படைத்துள்ளது என்றும் கூறும் அவர், பிரேசில் அணி இதுவரை தமது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்தவில்லை என்றும் கூறுகிறார்.

அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.