ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளாஸ்கோ மைதானத்தில் தமிழக ஓட்டவீரர் ஆரோக்ய ரஜீவ்

Image caption 'ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே கனவு': ஆரோக்ய ரஜீவ்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவின் 8-வது நாள் போட்டிகள் இன்று வியாழக்கிழமை நடக்கின்றன.

(ஜிஎம்டி நேரம் 16.30 மணிவரை) இங்கிலாந்து குறைந்தது 41 தங்கம் அடங்கலாக 113 பதக்கங்களை வென்று முன்னிலையில் இருக்கின்றது.

இரண்டாம் இடத்திலுள்ள ஆஸ்திரேலியா குறைந்தது 35 தங்கப் பதக்கங்களுடன் 108 பதக்கங்களை வென்றுள்ளது.

மூன்றாவது இடத்தை கனடா இன்று பிடித்துவிட்டது.

12 தங்கம், 19 வெள்ளி அடங்கலாக 44 பதங்கங்களுடன் 6-வது இடத்திலுள்ளது இந்தியா.

தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் இதுவரை ஒரு பதக்கத்தையும் வெல்லவில்லை.

நாளை முதலாம் திகதி இந்திய வீரர்கள் தொடரோட்டப் போட்டிகளில் (4X400 Relay) கலந்துகொள்கின்றனர்.

இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள தமிழக வீரர் ஆரோக்கிய ரஜீவ், தனது விளையாட்டு வாழ்க்கை, முயற்சிகள், எதிர்பார்ப்புக்கள் பற்றி கிளாஸ்கோவில் பிபிசி தமிழோசையிடம் பேசினார்.