இலங்கை சைக்கிள் வீரர் ஒருவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளாஸ்கோ போட்டிகள் : இந்திய, இலங்கை அணிகளின் பின்னடைவு ஏன்?

Image caption டாக்டர் ஆர் நடராஜன்

கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பதக்கப்பட்டியலில் 58 தங்கப்பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியா 15 தங்கம், 30 வெள்ளி மற்றும் 19 வெண்கலப் பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தை பெற்றது. ஒரே ஒரு வெள்ளிப்பதக்கம் மட்டும் வென்ற இலங்கை அணி 29 ஆவது இடத்தை பெற்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 38 தங்கப் பதக்கம் உட்பட 101 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருந்தது.

இந்தியா இம்முறை குறைந்த அளவில் பதக்கங்களைப் பெற்றுள்ளதற்கு பல காரணங்கள் உள்ளன என்று கூறுகிறார், தெற்காசியாவின் மிகவும் வேகமான மனிதர் என்று சுமார் பத்து ஆண்டுகள் அறியப்பட்டிருந்தவரும், இந்தியாவின் முன்னாள் ஒலிம்பியனுமான டாக்டர் ஆர் நடராஜன்

இலங்கை அணியின் செயல்பாடு குறித்து யாரும் மகிழ்ச்சியோ திருப்தியோ அடைய முடியாது என்று கூறுகிறார், அதன் தேசிய ஒலிம்பிக் சம்மேளனத்தின் தலைவர் ஹேமசிறி ஃபெர்ணாண்டோ.

இவர்கள் இருவரும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்.