குத்துச் சண்டை கையுரை, சதுரங்கக் காய்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அர்ஜுனா விருது : தொடரும் சர்ச்சைகள்

படத்தின் காப்புரிமை goi
Image caption அர்ஜுனா விருது

இந்தியாவில் விளையாட்டுத்துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கான தேர்வு தொடர்ந்து சர்ச்சையை எழுப்பும் விஷயமாகவே உள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியலில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றிருந்த மனோஜ் குமார் அந்த விருதுக்கு தேர்தெடுக்கப்படாத நிலையில், அவர் நீதிமன்றம் சென்றார்.

அவருக்கு அந்த விருதை வழங்குமாறு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்போது இந்திய விளையாட்டு அமைச்சகம் மனோஜ் குமாருக்கு, அர்ஜுனா விருது வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

அர்ஜுனா விருதுக்கான தேர்வு வெளிப்படையாகவும், நியாமாகவும் நடைபெறுவதில்லை எனும் குற்றச்சாட்டுக்களும் இந்தியாவில் முன்வைக்கப்படுகின்றன.

புள்ளிகளின் அடிப்படையில், விருதுக்கான தேர்வு இருக்க வேண்டும் என்று வழிகாட்டல் நெறிமுறைகள் இருந்தாலும், அது எப்போதும் பின்பற்றப்படுவதில்லை என்று, முன்னாள் ஒலிம்பிக் வீரரும், அர்ஜுனா விருதைப் பெற்றவரும், அந்த விருதுக்கானவர்களை தேர்தெடுக்கும் குழுவில் முன்னர் உறுப்பினராக இருந்தவருமான வி தேவராஜன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த ஆண்டுத் தேர்வில், குத்துச் சண்டைப் போட்டிகளில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மனோஜ் குமாரின் பெயரை பரிந்துரைக்காமல், வெண்கலப் பதக்கம் வென்றவரான ஜெய் பகவானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து மனோஜ் குமார் நீதிமன்றம் செல்ல, அவருக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்று டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையின் பின்புலம் குறித்து வி தேவராஜன் தெரிவித்தக் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.