இந்திய ரசிகர்களின் 'படைப்புணர்வை' பாராட்டும் பெடரர்

படத்தின் காப்புரிமை AMBER
Image caption மருதாணி வைத்துக்கொள்ளும் பெடரர் ( திருத்தியமைக்கப்பட்டு ரசிகர்களால் டிவீட் செய்யப்பட்ட படம் )

பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தனது இந்திய ரசிகர்கள் "படைப்புணர்வு" கொண்டவர்கள் என்று பாராட்டியிருக்கிறார்.

அவரது படங்களை இந்தியாவின் பிரசித்திபெற்ற இடங்களின் படங்களுடன் அவரது இந்திய ரசிகர்கள் கத்தரித்து இணைத்து ட்விட்டர் சமூக இணைய தளத்தில் வெளியிட்ட பின்னர் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட படங்கள் அவர் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா இடங்களான, தாஜ்மஹால் போன்றவற்றின் முன் அவர் நிற்பது போலவும், பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களுடன் நடனமாடுவது போலவும், ஹோலி பண்டிகையில் கலந்து கொள்வது போலவும், கங்கை நதியில் குளிப்பது போலவும் காட்டுகின்றன.

ரோஜர் பெடரர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடுகிறார்.

தனது இந்திய விஜயத்தின் போது தான் அங்கு ஒரு சில நாட்களே இருப்பதால், இந்தியாவில் எந்தெந்த இடங்களைப் பார்க்கவேண்டும் என்று தனக்கு இது போல கத்தரித்து ஒட்டப்பட்ட புகைப்படங்களை அனுப்பு ஆலோசனை கூறுமாறு பெடரர் தனது ரசிகர்களைக் கோரியிருக்கிறார்.