சிறார்களை ஊக்குவிக்க முயற்சிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தேசியக் கால்பந்து பட்டத்தை வெல்லுமா தமிழக அணி?

  • 5 ஜனவரி 2015

இந்தியக் கால்பந்து சாம்பியன்ஷிப்பான சந்தோஷ் கோப்பையை தமிழக அணி இதுவரை வென்றதில்லை.

இந்நிலையில் தமிழக கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஆசிய கால்பந்து பயிற்சி பட்டயத்தை பெற்றுள்ள ராபின் சார்லஸ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

அணியில் கூடுதலாக இளைஞர்களை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.

எனினும் அடிப்படை கட்டுமானங்களில் மாறுதல்கள் தேவை என்றும், பல கிராமங்களில் கால்பந்து விளையாட்டு மைதானங்கள் கிரிக்கெட் மைதானங்களாக மாறியுள்ளன அல்லது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றும், அவை உள்ளூர் அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் தடைகளை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் கூறுகிறார்.

புதிய பயிற்சியாளரின் கீழ் தமிழக அணி மதிப்புமிக்க அந்தக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இது குறித்து ராபின் சார்லஸ் ராஜா பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்.