மேவெதர் ஜூனியர்-மேனி பெக்கெஷியோ இடையே குத்துச்சண்டை அறிவிப்பு

  • 21 பிப்ரவரி 2015

மிக நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் குத்துச்சண்டைப் போட்டி ஒன்று வரும் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption மேவெதர்(இடது)-பெக்கெஷியோ இடையே மே மாதம் லாஸ் வேகஸில் போட்டி

அமெரிக்க வீரர் ஃப்ளாயிட் மேவெதர் ஜூனியர் தனக்கும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மேனி பெக்கெஷியோவுக்கும் இடையேயான போட்டி லாஸ் வேகஸ் நகரில் இந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் வாரம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

வெல்டர்வெயிட் பிரிவில் இவ்விருவருக்கும் இடையேயான போட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டு வந்தது.

நீண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து இது தொடர்பிலான ஒப்பந்தமும் இப்போது ஏற்பட்டுள்ளது. அதேபோல போட்டி ஒளிபரப்பு குறித்தும் இரண்டு அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தப் போட்டி இதுவரை இல்லாத வகையில் வசூலில் சாதனைப் படைக்கும் என்று கணிக்கப்படுகிறது. அவ்வகையில் இப்போட்டி 250 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.

போட்டியாளர்கள் இருவரும் சமவலிமை கொண்டவர்கள், அவர்கள் மீது கட்டப்படும் பணமும் பெறுமதி வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

எனினும் இருவரும் தமது திறமையின் உச்சத்தை கடந்துவிட்டனர் என்றும், இந்தப் போட்டி பல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.