இந்த நூற்றாண்டின் பெரிய குத்துச்சண்டைப் போட்டி

படத்தின் காப்புரிமை Getty
Image caption இருபெரும் ஜாம்பவான்கள் மோதுவதை ஆயிரக் கணக்கானோர் நேரடியாகப் பார்க்கின்றனர்

இந்த நூற்றாண்டின் பெரும் குத்துச்சண்டை என்று வர்ணிக்கப்படும் போட்டியில் அமெரிக்க வீரர் ஃளோய்ட் மேவெதர் மற்றும் பிலிப்பைன்ஸ் வீரர் மணி பக்கியா ஆகியோர் லாஸ் வேகஸ் நகரில் இன்று சனிக்கிழமை மோதுகின்றனர்.

உலகின் இருபெரும் குத்துச்சண்டை ஜாம்பவான்களும் மோதுவதை சுமார் 11 ஆயிரம் ரசிகர்கள் நேரடியாக கண்டுகளிக்கவுள்ளனர்.

முன்னதாக, உடல் எடை பார்க்கும் நிகழ்வில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது, பக்கியா புன்னகைத்தார். மேவெதர் எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை.

இதுவரை தோல்விகண்டிராத மேவெதர் பாக்ஸிங் உலகின் வில்லன் என்று வர்ணிக்கப்படுபவர். பக்கியா பிலிப்பைன்ஸின் தேசிய வீரராக வர்ணிக்கப்படுகிறார்.

38 வயதான மேவெதரின் உடல் எடை 66.2 கிலோ என்றும் 36 வயதான பக்கியாவின் உடல் எடை 65.7 கிலோ என்றும் இன்றைய எடை பார்க்கும் நிகழ்வில் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.