ஜூல்ஸ் பியான்சி மரணம்:குடும்பத்தினர் வழக்கு தொடுப்பார்கள்

  • 26 மே 2016

கடந்த ஆண்டு இறந்த, பார்முலா ஒன் போட்டியின் முன்னாள் ஒட்டுநர், ஜூல்ஸ் பியான்சியின் குடும்பத்தினர் உலக வாகன விளையாட்டு அதிகார அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption ஜூல்ஸ் பியான்சி குடும்பத்தினர் உலக வாகன விளையாட்டு அமைப்பு மீது வழக்கு தொடுப்பார்கள்

2014 ஆம் ஆண்டு ஜப்பான் கிரான்ட் பிரி போட்டியில் பங்கேற்ற பிரான்ஸ் வீரர் ஜூல்ஸ் மீட்புதவி வாகனத்தில் மோதி பல மாதங்களாக கோமா நிலையில் இருந்தார். பியான்சியின் அணியான, மருஸ்ஷயா மற்றும் பார்முலா ஒன் குழுவிற்கு மேல் வழக்கு தொடுக்கப்போவதாக பியான்சி குடும்பத்தினரின் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

ஜப்பானில் சூறாவளி பருவத்தின்போது ஆபத்தான நிலைமையில் இந்த பார்மலா ஒன் போட்டி நடத்தப்பட்டிருக்க கூடாது என்பது அவர்களது வாதமாக உள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டிருப்ப்போரிடமிருந்து இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை.