இத்தாலிய கால்பந்து கிளப்பின் 70 விழுக்காடு பங்குகளை வாங்கும் சீன நிறுவனம்

  • 6 ஜூன் 2016

மின்னணு சில்லறை வியாபாரம் செய்யும் சீன நிறுவனம் ஒன்று இன்டர் மிலான் என்ற இத்தாலிய கால்பந்து கிளப்பின் 70 விழுக்காடு பங்குகளை வாங்கயிருக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption சுன்னிங் நிறுவனத்தின் தலைவர் ட்சாங் ஜின்தொங் (வலது) இந்தோனேஷிய வர்த்தகர் எரிக் தோஹீர்

தற்போதைய 30 விழுக்காடு பங்குகளை இந்தோனேஷிய வர்த்தகர் எரிக் தோஹீர் தக்க வைத்திருக்கும் வேளையில், 70 விழுக்காட்டிற்கு 306 மில்லியன் அமெரிக்க டாலர்களை சுன்ஜிங் நிறுவனம் செலுத்தவிருக்கிறது.

இவ்வளவு பங்குகளை வாங்கியிருப்பது சீன கால்பந்து விளையாட்டிற்கு ஒரு மைல்கல் என கூறியிருக்கும் சுன்னிங் நிறுவனத்தின் தலைவர் ட்சாங் ஜின்தொங் (Zhang Jindong) இன்டர் மிலானின் இரண்டாவது தாயகமாக சீனா உருவாகும் என்று கணித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Reuters

உலக கால்பந்து விளையாட்டில் சீனா நற்பெயர் பெறுவதற்கு சிறந்த ஊக்கம் கொடுப்பதை சீன அதிபர் ஷி ஜீன்பிங் (Xi Jinping) மேற்பார்வை செய்து வருகிறார்.

2050 ஆம் ஆண்டுக்குள் உலக கால்பந்து கோப்பையில் விளையாட தகுதி பெறவும், அந்தப் போட்டியை சீனாவில் நடத்தவும், கோப்பையை வெல்லவும் சீன தேசிய கால்பந்து அணிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.