கால்பந்து ஜாம்பவான் பிலேயின் விளையாட்டு பொருட்கள் ஏலம்

சிறந்த கால்பந்து ஆட்டக்காரராக எப்போதும் கருதப்படும் பிரேசிலிய விளையாட்டு வீரர் பிலேயின் தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் உள்ளடக்கிய நினைவுச் சின்னங்கள் இன்று இலண்டனில் விற்பனைக்கு வந்துள்ளன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பிலேயின் தொழில்முறை வாழ்க்கையின் நினைவுச் சின்னங்கள் லண்டனில் ஏலம்

அவருடைய உலகக் கோப்பை வெற்றி பதக்கங்கள் தொடங்கி ஆயிரமாவது கோல் அடித்த கால்பந்து, 100 ஆண்டில் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கான பிஃபா விருது ஆகியவை வரையான பல பொருட்கள் அடுத்த மூன்று நாட்களில் ஏலத்தில் விடப்படவுள்ளன.

Image caption பிலேயின் பதக்கங்கள், ஆயிரமாவது கோல் அடித்த கால்பந்து, 100 ஆண்டில் தலைசிறந்த விளையாட்டு வீரருக்கான பிஃபா விருது என பல பொருட்கள் ஏலத்திற்கு வந்துள்ளன.

இதுவரை இல்லாத அளவுக்கான விலை மதிப்பு மிக்க விளையாட்டு பொருட்களின் ஏலமாக இது அமையும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை JULIENS
Image caption ஏலத்தொகையில் ஒரு பகுதியை அறக்கொடைக்கு பிலே வழங்கவுள்ளார்.

இதில் வருகின்ற தொகையில் ஒரு பகுதியை அறக்கொடையாக வழங்க போவதாக 75 வயதாகும் பிலே தெரிவித்திருக்கிறார்.