யுரோ 2016 போட்டிகள்: இன்றைய நேர அட்டவணை

  • 12 ஜூன் 2016
படத்தின் காப்புரிமை Getty

யுரோ 2016 கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

முதலாவதாக, குரூப் டி பிரிவில் துருக்கி மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையே பாரீஸில் 1300 (ஜி.எம்.டி) நேரத்தில் தொடங்கியது.

குரூப் சி பிரிவில், வட அயர்லாந்து - போலாந்து இடையே நைஸ் பகுதியில் 16.00 (ஜி.எம்.டி) நேரத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில், வட அயர்லாந்து முதல் முறையாக தகுதி பெற்று முதன் முறையாக போலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

20 ஆண்டுகளுக்குமுன் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய ஜெர்மனி யுக்ரைனை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த போட்டி, லீல் பகுதியில் 19.00 (ஜி.எம்.டி) நேரத்தில் நடைபெற உள்ளது.

யுரோ 2016 இன்றைய போட்டியின் அட்டவணை
பிரிவுகள் மோதும் அணிகள் ஜி.எம்.டி இந்திய நேரம்
குரூப் டி துருக்கி - கோரெஷியா 13.00 06.30
குரூப் சி வட அயர்லாந்து - போலாந்து 16.00 09.30
குரூப் சி ஜெர்மனி - யுக்ரைன் 19.00 12.30