பொது சேவைகளுக்கு பணம் இல்லை - ரியோ ஆளுநர்

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்குவதற்கு 15 நாட்களுக்கும் குறைவாவே இருக்கின்ற நிலைமையில் பொது சேவைகளுக்கு பணம் தீர்ந்துவிட்டது என்று ரியோ டி ஜெனீரோவின் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பிரேசில் பெடரல் அரசிடமிரந்து உதவி பெற ரியோவில் ஒரு நிதி அவசர நிலை பிரகடனம்

பிரேசிலின் பெடரல் அரசிடமிருந்து உதவியை வேண்டுவதற்காகவே ஒரு நிதி அவசர நிலையை பிரகடனம் செய்வதாக ஆளுநர் பிரான்சிஸ்கோ டோர்நெல்லஸ் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பொது சேவைகளை அளவாக வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்

ஒலிம்பிக் மற்றும் மாற்றுதிறனாளிகளின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு செய்து தருவதாக வழங்கிய உறுதிமொழிகளை ரியோ நிறைவேற்றாமல் இருக்க நிதி நெருக்கடி காரணமாக அமையலாம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதாக அதிபர் மைக்கேல் டெமர் தெரிவித்திருக்கிறார்

பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் பொது சேவைகளை அளவாக வழங்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் இல்லை என்றால் மொத்தமும் தகர்ந்துவிடும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த வாரம் ரியோவை சந்தித்த பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் எல்லா கடமைகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.