சர்வதேசப் போட்டிகளிலிருந்து மெஸ்சி ஓய்வு

தேசிய அணிக்காக மீண்டும் விளையாடப் போவதில்லை என்று அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு நட்சத்திரமான லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை PA
Image caption சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவிப்பு

கோபா அமெரிக்கா கால்பந்து இறுதி போட்டியில் எதிர்த்து விளையாடிய சிலி அணியிடம் தோல்வியடைந்த பின்னர் அர்ஜென்டினா தொலைக்காட்சியில் பேசியபோது மெஸ்சி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் சிலி அணியிடம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அர்ஜென்டினா தோல்வியை தழுவியுள்ளது

இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமநிலை பெற்ற பிறகு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் அடித்த கோல் கணக்கில் சிலி வென்றது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பெனால்டிக் முறையில் மெஸ்சி கோல் அடிக்க தவறினார்

அவ்வாறு கிடைத்த பெனால்டி முறையில் கோல் அடிக்க தவறிய வீரர்களில் மெஸ்சியும் ஒருவர்.

படத்தின் காப்புரிமை AFP.Getty Images
Image caption 2014 உலக கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா தோல்வியை தழுவியது

இந்த விளையாட்டின் முடிவு போலவே கடந்த ஆண்டு இதே போட்டியின் இறுதி போட்டியும் அமைந்திருந்தது.

மெஸ்சியும், அர்ஜென்டினாவும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கால்பந்து போட்டியிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.