'டூர் தெ பிரான்ஸ்' சைக்கிள் பந்தயம் இன்று தொடக்கம்

உலகின் மிகப் பிரபலமான சைக்கிள் பந்தயமான 'டூர் தெ பிரான்ஸ்' இன்று வடக்கு பிரான்ஸில் உள்ள நார்மண்டியில் துவங்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption கோப்பு படம்

தனது மூன்றாவது 'டூர் தெ பிரான்ஸ்' பட்டத்தை வெல்லும் முயற்சியில் பிரிட்டனின் கிறிஸ் ஃபுரூம் ஆயுத்தமாக உள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிரிட்டனின் கிறிஸ் ஃபுரூம்

கொலம்பியாவின் நெய்ரோ கின்டானா மற்றும் இப்பட்டத்தை முன்பு வென்ற ஸ்பெயினின் அல்பர்ட்டோ கொன்டாடோர் ஆகியோர் கிறிஸ் ஃபுரூமுக்கு முக்கிய போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மோன்-சேன்_மிஷேல் தீவினில் துவங்கும் இந்தப் போட்டி தொடர், மூன்று வார காலத்தில் பாரிஸில் உள்ள ஷாம்ப்ஸ்-எலிஸேவில் முடிவடைய உள்ளது.

இதில் உலகின் முன்னணி சைக்கிள் பந்தய வீரர்கள் 198 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.