பெண்களை உறுப்பினர்களாக அனுமதிக்க ராயல் ட்ரூன் கோல்ஃப் கிளப் ஏகமனதாக வாக்களிப்பு

ஸ்காட்லாந்தில் உள்ள பெருமைமிகு கோல்ஃப் கிளப்களில் ஒன்றான ராயல் ட்ரூன், தங்கள் கிளப்பின் உறுப்பினர்களாக பெண்களை அனுமதிக்க மிகப்பெருமளவில் வாக்களித்துள்ளது.

Image caption கோப்பு படம்

இது குறித்து அண்மையில் நடந்த ஆலோசனையில் பங்கேற்றவர்களில், கிளப்பின் உறுப்பினர்களாக பெண்களை அனுமதிக்கும் முயற்சிக்கு, நான்கில் மூன்று பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததாக ராயல் ட்ரூன் கிளப் கூறியுள்ளது.

கடந்த மே மாதம், மற்றோரு ஸ்காட்டிஷ் கிளப்பான முயிர்பிஃல்ட் கிளப் கிளப்பின் உறுப்பினர்களாக பெண்களை அனுமதிக்க மறுத்து வாக்களித்ததை தொடர்ந்து, கோல்ஃப் ஓபன் சாம்பியன்ஷிப்பை நடத்தும் உரிமையினை அக்கிளப் இழந்தது.

இந்த ஆண்டுக்கான கோல்ஃப் ஓபன் சாம்பியன்ஷிப்பை, ராயல் ட்ரூன் கிளப் அடுத்த மாதம் நடத்தவுள்ளது.