ரஷ்ய அணி ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை வருமா?

படத்தின் காப்புரிமை

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின்போது ரஷிய தடகளவீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்த சுயாதீன அறிக்கை ஒன்று இன்று வெளியாகவுள்ளது.

ஏமாற்று வேலை பெரிய அளவில் நடைபெற்றது என்றும், ரஷிய அரசின் ஆதரவோடு அது நடந்தது என்றும் மாஸ்கோவின் ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான ஆய்வகத்தின் முன்னாள் தலைவர் கிரிகொரி ராோட்சென்கோஃவ் எழுப்பிய குற்றச்சாட்டுக்களை இந்த அறிக்கை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் மூன்று வாரத்திற்கு குறைவான நாட்களில், ரியோ நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து, ரஷிய குழுவை முற்றிலுமாக தடை செய்ய, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு இந்த அறிக்கை அழுத்தம் கொடுக்கலாம்.

ரஷியாவின் தடகள விளையாட்டு வீரர்கள் ஏற்கெனவே தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களை ரஷியா மறுத்து வருகிறது.