இந்தியா: பிசிசிஐ அமைப்பிற்கு 6 மாத காலம் கெடு விதித்துள்ள உச்ச நீதிமன்றம்

படத்தின் காப்புரிமை

நாட்டின் கிரிக்கெட் போட்டிகளை நிர்வகிக்கும் 'பிசிசிஐ' அமைப்பில் விரிவான சீர்த்திருத்தங்களை அமல்படுத்த வேண்டி இந்தியா உச்ச நீதிமன்றம் நிர்வாக குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, பிசிசிஐ அமைப்பில் அமைச்சர்கள் , அரச ஊழியர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட எவரும் பதவி வகிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் பந்தயம் கட்டுவதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது குறித்து எந்த தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கவில்லை.

படத்தின் காப்புரிமை AP

பல மில்லியன் டாலர் வருவாய் குவிக்கும் கிரிக்கெட் விளையாட்டில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் பீடித்துள்ள நிலையில், அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பு கூறும் தன்மை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அமைக்கப்பட்ட கமிட்டியானது இந்த பரிந்துரைகளை முதலில் முன்வைத்தது.

இந்த மாற்றங்களை பிசிசிஐ அமைப்பின் நிர்வாக குழு 6 மாதங்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.