ஒலிம்பிக்ஸ்: அற்புதமான தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு)

கெட்டி இமேஜஸ் குழுவின் உறுப்பினரான பிரபல புகைப்பட நிபுணர் எல்சா காரிசன், ரியோவில் நாளை துவங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பணியாற்ற, 40 சிறப்பு விளையாட்டு புகைப்பட நிபுணர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில், தன் மனம் கவர்ந்த சில புகைப்படங்களை காரணங்களோடு பட்டியலிட்டுள்ளார். அவை நீங்கள் ரசிப்பதற்காக:

படத்தின் காப்புரிமை Getty
Image caption 2004 ஒலிம்பிக்ஸ்: மகளிர் வாள்வீச்சு போட்டி பிரிவில் தங்கம் வென்ற ஹங்கேரியின் டிம்மையா நாகி

இந்தப் புகைப்படத்தை நன்கு உற்று பாருங்கள். தங்கம் வென்ற மகிழ்ச்சியில் அந்தரத்தில் பறக்கும் டிம்மையா நாகியும், அவர் அணியினரும், வெற்றியின் மகிழ்ச்சியை, அனுபவத்தை நமக்கு கற்றுத் தருவது போல உள்ளது இந்த புகைப்படம்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption 1948 லண்டன் ஒலிம்பிக்ஸ்: மகளிர் 100 மீட்டர் ஓட்ட பிரிவில் வெற்றி பெற்ற நெதர்லாந்தின் ஃபானி பிளாங்கர்ஸ்

1948 காலகட்டத்தில் இருந்த குறைந்தளவு தொழில்நுட்ப வசதி, புகைப்பட கருவிகளை கொண்டு எடுக்கப்பட்ட இந்த நுட்பமான புகைப்படத்தில், வீராங்கனைகளின் பரபரப்பு தருணங்களை காணலாம்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption வண்ண மயமான இந்த ஒலிம்பிக் தொடக்க விழாவை வார்த்தைகளினால் வேறு விளக்க வேண்டுமா?

இந்த வண்ணமயமான தொடக்க விழா புகைப்படம் , 2000 சிட்னி ஒலிம்பிக்ஸ் போட்டியின் போது எடுக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் என்று ஆர்பரிப்புடன், உலகின் வேகமான மனிதன் உசேன் போல்ட்

உசேன் போல்ட் முகபாவத்தை பாருங்கள். வெற்றி, ஆக்ரோஷம், சாதனை உணர்வு எல்லாம் கலந்த ஒரு பரவச நிலை நிரம்பிய இந்த புகைப்படத்தை எடுத்தவருக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடும் பிரேசிலின் மகளிர் வாலிபால் வீராங்கனை நடாலியா பெரேரியா

பிரேசில் வீராங்கனையின் வெற்றி புன்னகையையம், தோல்வியால்துவண்டுள்ள ரஷ்ய வீராங்கனைகளின் சோகத்தையும் ஒருசேர படம் பிடித்துள்ளது, இந்த புகைப்படத்தின் சிறப்பம்சம்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption 1996 ஒலிம்பிக்ஸ்: காயமடைந்தாலும் தங்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கெர்ரியை தாங்கி பிடித்திருப்பவர் அவரின் பயிற்சியாளர்

1996 அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படம், தருணம் இதுவென கூறலாம். உனக்கு நான் இருக்கிறேன் என்று வீராங்கனையை தாங்கி பிடித்துள்ள பயிற்சியாளர் பேலா வெகுவாக பாராட்டப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption 2012 ஒலிம்பிக்ஸ்: லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் பறந்த சிவப்பு அம்புகள்

ஓவ்வொரு ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவும், முந்தைய ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவை விட சிறப்பாக இருக்கும். லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் நடந்த இந்த வான வேடிக்கை, மைதானத்தில் மட்டுமின்றி, நகரையே ஒலிம்பிக்ஸ் உணர்வில் மூழ்கடித்தது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption 1968 ஒலிம்பிக்ஸ்: நீளம் தாண்டுதலில் அமெரிக்காவின் பாபி பியமன் உலக சாதனை நிகழ்த்திய தருணம்

1968 ஒலிம்பிக்ஸ் போட்டியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மிகவும் சிறப்பானது என்று பெயர் பெற்றுள்ளது. டெலிஃபோட்டோ லென்ஸ்கள் மூலம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், இதனை போல பல புகைப்படங்கள் பிற்காலத்தில் எடுக்க தூண்டுகோலாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption 2012 ஒலிம்பிக்ஸ்: மகளிர் 3 மீட்டர் ஊஞ்சல் நீச்சல் பலகை போட்டி பிரிவில் பங்கேற்ற அமெரிக்காவின் கிறிஸ்டினா லூகாஸ்

நீரின் அழகையும், நீரில் பாய்ந்த வீராங்கனையை சுற்றிலும் இதய வடிவில் உருவான நீர் வடிவ அழகையும் நீச்சல் குளத்தில் முன்னரே வைக்கப்பட்ட ரிமோட் புகைப்பட கருவி படம்பிடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty
Image caption இது ஒற்றையர் போட்டியா,? இரட்டையர் போட்டியா?

இரட்டையர் டென்னிஸ் போட்டிகளை புகைப்படம் எடுக்கும் போது, புகைப்பட ஃ பிரேமுக்குள் இரண்டு வீரர்களும் இருப்பது அவசியம், இல்லையெனில், அது ஒற்றையர் டென்னிஸ் ஆட்டம் போல தோன்றும். காத்திருந்து மிகவும் அபூர்வமாக எடுத்த இந்த புகைப்படத்தின் அழகைப் பாருங்கள்!