ரியோ டி ஜெனிரோ: பிரபல இடங்களை சுற்றி வரும் ஒலிம்பிக் சுடர்

படத்தின் காப்புரிமை AFP

ரியோ டி ஜெனிரோவில் இன்று வெள்ளிக்கிழமையன்று ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரபூர்வமாக தொடங்கப்படுவதற்குமுன், ஒலிம்பிக் சுடரானது ரியோ நகரின் மிகவும் பிரபலமான இடங்களை வலம் வந்து கொண்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை AP

முன்னாள் பிரேசிலிய கைப்பந்து நட்சத்திரமான இஸபெல் பரோசோ சல்கடோ, ரியோ நகரை பார்த்தபடி மலை உச்சியில் கைகளை ஏந்தியபடி காட்சி தரும் ஏசு கிறிஸ்து சிலையின் காலடியை நோக்கி சுடரை ஏந்தி சென்றார்.

மரக்கானா விளையாட்டரங்கில் நடைபெற உள்ள திறப்பு விழா நிகழ்ச்சிகளை மில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சி மூலம் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

பிரேசிலின் எந்தப் பிரபலம் ஒலிம்பிக் சுடரை ஒலிம்பிக் கொப்பரையில் ஏற்றுவார் என்பது குறித்து பலத்த யூகங்கள் நிலவும் நிலையில், பந்தயம் கட்டும் முகவர்கள், பிரபல கால்பந்து வீர்ர் பீலேதான் இதைச் செய்வார் என்று கருதுகின்றனர்.