ஒலிம்பிக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் நீச்சல் போட்டியில் பிரிட்டனுக்கு தங்கம்

பிரிட்டன் நீச்சல் வீரர் ஆதாம் பீட்டி 100 மீட்டர் ஆடவர் குப்புறப்படுத்து (பிரஸ்ட் ஸ்டோக்) நீந்தும் போட்டியில் தன்னுடைய உலகச் சாதனை பதிவையே முறியடித்து, ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தனது நாட்டிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார்.

1988 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வெல்லும் முதல் பிரிட்டன் நீச்சல் வீரர் இவர் தான்.

இப்போட்டியில் 57.13 வினாடிகள் பதிவில் பதிய உலகச் சாதனை பதிவை உருவாக்கியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty

400 மீட்டர் பெண்கள் சுதந்திர பாணி (ஃபீரி ஸ்டைல்) நீச்சல் போட்டியில் புதிய உலகச் சாதனை பதிவை உருவாக்கி இருக்கும் அமெரிக்க வீராங்கனை கேத்றி லிடிக்கி தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty

டென்னிஸ் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்றுள்ள அமெரிக்காவின் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகளை போல, பிரிட்டனின் ஆன்டி மற்றும் ஜமியே மெர்ரி வீரர்களும் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர்.