ரியோ: ஜாம்பவான் மைக்கெல் பெல்ப்ஸை வீழ்த்தி முதல் தங்கம் வென்ற சிங்கப்பூர்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption களத்தில் மைக்கெல் பெல்ப்ஸ் மற்றும் ஜோசப் ஸ்கூலிங்

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக தங்கப்பதக்கத்தை சிங்கப்பூர் வென்றுள்ளது. அதுவும் சாதாரண வெற்றியல்ல, சாம்பியனை வீழ்த்தி இந்த கெளரவத்தைப் பெற்றிருக்கிறது.

வெற்றிகரமான ஒலிம்பிக் வீரர் என கருதப்படும் அமெரிக்காவின் மைக்கெல் பெல்ப்ஸை நீச்சல் குளத்தில் சிங்கப்பூரின் ஜோசப் ஸ்கூலிங் வீழ்த்தினார்.

நூறு மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள பெல்ப்ஸ், அதனை இருவருடன் பகிர்ந்து கொள்கிறார்.

படத்தின் காப்புரிமை
Image caption 2008ல் மைக்கெல் பெல்ப்ஸ் உடன் ஜோசப் ஸ்கூலிங்

நீச்சல் போட்டிகளின் கடைசி நாளில் நடைபெற உள்ள நூறு மீட்டர் மெட்லெ ரிலே பிரிவில் பெல்ப்ஸ் 23வது தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த போட்டிகளுக்குப் பிறகு நிரந்தர ஓய்வு பெற உள்ளதாக மைக்கெல் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவின் கேட்டி லிடெக்கி, பெண்களுக்கான போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

800 மீட்டர் ஃப்ரி ஸ்டைல் இறுதிப் போட்டியில் உலக சாதனையை அவர் முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.