ரியோ: பி.வி.சிந்து முன்னேற்றம்

படத்தின் காப்புரிமை Reuters

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வேளையில், இறகுப்பந்தாட்டத்தில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் இறகுப் பந்தாட்டத்தில் பி.வி.சிந்து, கனடாவின் மிஷெல் லீயை எதிர் கொண்டார்.

விறுவிறுப்பான ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிஷெல் லீயை 19-21, 21-15, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.