பதக்க வாய்ப்பை பறிகொடுத்த சானியா - போபண்ணா ஜோடி
ரியோ ஒலிம்பிக் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், செக் குடியரசு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய இணை சானியா - போபண்ணா, தோல்வியைத் தழுவினர்.
இன்று நடந்த ஆட்டத்தில், செக் குடியரசு அணியை சேர்ந்த ராதேக் மற்றும் லூசி ராடேக்காவை எதிர்த்து இந்திய ஜோடி களமிறங்கியது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் செக் குடியரசு இணையிடம், இந்திய இணை 1-6, 5-7.என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது.
இதனால், நிச்சயமாக டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்லும் என்ற கனவு பொய்த்துப் போனது.