ஐரோப்பிய ஒலிம்பிக் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு

படத்தின் காப்புரிமை PA

ஐரோப்பிய ஒலிம்பிக் தலைவர் பேட் ஹிக்கிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக பிரேசில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

ஒலிம்பிக் டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக மறு விற்பனை செய்தததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 71 வயதான அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹிக்கி, புதன்கிழமையன்று அவர் தங்கியிருந்த ஹோட்டலில் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு ஒலிம்பிக் அமைப்புக்களில் இருந்து அவர் தாற்காலிகமாக விலகியிருக்கிறார்.