200 மீட்டரிலும் வென்றார் உசைன் போல்ட் -'மும்முறை மூன்றை' நோக்கிப் பயணம்

ஜமைக்காவின் தடகளவீரர் உசைன் போல்ட் ரியோ ஒலிம்பிக்ஸில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்போட்டியிலும் வென்றுவிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters

இதன் மூலம் போல்ட், துரித ஓட்டப் போட்டியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க "மும்முறை மூன்று " தங்கங்களை வெல்லும் பாதையில் திடமாக இருக்கிறார்.

200 மீட்டர் போட்டியில் 19.79 விநாடிகளில் போல்ட் எளிதாக வென்றார்.

இப்போது அவர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா அணியுடன் சேர்ந்து வென்றால் அவர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்த ஓட்டப்பந்தயங்களில் மூன்று முறை தொடர்ச்சியாக தங்கம் வென்ற சாதனையை நிகழ்த்திவிடுவார்.

இந்த வாரம் முன்னதாக அவர் தனது 100 மீட்டர் ஓட்டப்பந்தய சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

மற்ற தடகளப் போட்டிகளில் அமெரிக்க வீரர்கள் மேலும் நான்கு தங்கங்களை வென்றனர். டேகேத்லான் போட்டியில், அமெரிக்கரான ஆஷ்டன் ஈட்டன் தனது முந்தைய ஒலிம்பிக் சாதனையை சமன்செய்து, கடுமையான போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.