நாடகமாடிய மேலும் 2 அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடு திரும்பினர்

படத்தின் காப்புரிமை Getty

ரியோ டி ஜெனிரோவில் துப்பாக்கி முனையில் தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறிய அமெரிக்க நீச்சல் வீரர்கள் நான்கு பேரில் மேலும் இருவர் அமெரிக்கா திரும்பினார்கள். அந்த வீரர்கள் சொன்ன தகவல் பொய் என்று தெரிய வந்ததும் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி மன்னிப்புக் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை

தொடர்ந்து பிரேசிலில் இருக்கும் ஒரு வீரர் ஜேம்ஸ் ஃபெய்ஜென், தனது பாஸ்போர்ட் தனக்குத் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், சுமார் 11 ஆயிரம் டாலர்களை அறக்கட்டளை ஒன்றுக்கு வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பிரேசில் சட்ட விதிகளின்படி, சிறு குற்றச்சாட்டுக்களில் தண்டனை பெறுவதற்கு பதிலாக, இதுபோன்ற நன்கொடைகளை வழங்க முடியும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.