மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி செலவு குறைக்கப்படுகிறதா?

படத்தின் காப்புரிமை s

இன்னும் மூன்று வாரங்களுக்குள் ரியோ நகரில் நடைபெற இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் முக்கியமான வெட்டுகள் இருக்கும் என தெரிய வருகிறது.

நிகழ்வுகள் நடைபெற்றாலும், கடும் நிதிப் பிரச்சினைகள் மற்றும் நுழைவுச் சீட்டு விற்பனையில் மந்தம் காரணமாக, திட்டமிட்டபடி முழுமையாக நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்த விளையாட்டு நிகழ்வுகள் சில இடங்களில் மட்டுமே நடைபெறும். ஊழியர்களும் குறைக்கப்படுவர்.

வரலாற்றில் எப்போதும் இது போன்றதொரு நிலைமையை மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டிகள் இதுவரை சந்தித்ததில்லை என்று தெரிவித்திருக்கும் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் பிலிப் கிரேவன், இந்த சவால்களை எதிர்கொண்டு தங்கள் அமைப்பு மீண்டு எழும் என்று தெரிவித்திருக்கிறார்.