இங்கிலீஷ் பிரிமியர் லீக்: பல மில்லியன் டாலர்கள் புழக்கம்

  • 1 செப்டம்பர் 2016

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் உள்ள கால்பந்து கழகங்கள், கோடைக்கால சாளர மாற்று முறையின் கடைசி நாளில், புதிய வீரர்களை வாங்குவதில் 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்துள்ளன.

படத்தின் காப்புரிமை AFP

புதன்கிழமைதான் இதற்கான கடைசி நாள்; இரண்டு மாதங்களில் 1.5 பில்லியன் டாலர் கைமாறியுள்ளதாக பதிவாகியுள்ளது.

பிரிமியர் லீக் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களுக்கு மத்தியில் நடந்த லாபகரமான ஒப்பந்தம் இந்த அதிபடியான செலவுகள் செய்வதற்கு உதவியுள்ளது.

பிரேசில் ஆட்டக்காரர் டேவிட் லுயிச், செல்சீ அணிக்கு திரும்ப வந்ததும், லிவர்பூலின் இத்தாலிய வீர்ர் மரியோ பலொடெலி, நீஸ் பிரான்ஸ் க்ளப் அணிக்கு மாறியதும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஆகும்.