டி 20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி உலகச் சாதனை

டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம்.

இலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தமது இருபது ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் கென்ய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒரு போட்டியில் பெற்றிருந்த 260 ஓட்டங்களே டி 20 சாதனையாக இருந்தது.

சிறப்பாக ஆடிய கிளென் மேக்ஸ்வெல் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சில நாட்கள் முன்னர்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ஒட்டங்களை எடுத்து சாதனைப் படைத்தது.

அவ்வகையிலான போட்டியிலும் முந்தையச் சாதனை இலங்கை அணியின் பெயரிலேயே இருந்தது.