ஸ்பெயின்: எருது விடும் விளையாட்டை நிறுத்த வலுக்கிறது எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty

ஸ்பெயினில் பெரிதும் விரும்பப்படும் எருது விடும் விளையாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென கோரி ஆயிரக்கணக்கானோர் மாட்ரிட் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

அந்த செயல் தேசத்திற்கே வெட்கக்கேடு என்று எழுதப்பட்ட பதாகைகளை பேரணியில் கொண்டு சென்று இதனை கண்டித்திருக்கின்றனர்.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி இதுவரை நடந்திராத மிகவும் பெரிய பேரணி என்று விலங்கு உரிமைகள் அரசியல் கட்சியின் (பாக்மா) செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.

ஜூன் மாதத்தில் கேஸ்டீலியா ய லியோன் பிராந்திய அரசு நகர பண்டிகைகளின்போது எருதுகளை கொல்லப்படுவதை தடை செய்தது.

படத்தின் காப்புரிமை European Photopress Agency

வட பிராந்தியங்களில் நடைபெறும் நூற்றுக்கணக்கான குதிரை வீரர்கள் ஈட்டியால் எருதை கொல்ல முயலுகின்ற, தோரோ டி ல விகா பண்டிகையை இலக்கு வைத்து இந்த தடை அமைந்தது,

எருது-மனித சண்டை விளையாட்டு 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பாரம்பரியமாக இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இதன் மீதுள்ள உற்சாகம் குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை EPA

விலங்குகள் உரிமை செயற்பாட்டாளர்களின் பரப்புரை இதற்கு ஒரு காரணமாகும்.

தொடர்புடைய தலைப்புகள்