அமெரிக்க ஓபன் டென்னிஸ் கோப்பையை வென்றார் வாவ்ரிங்கா

படத்தின் காப்புரிமை AFP

நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டியின் இறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ஸ்டேன் வாவ்ரிங்கா வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு சாம்பியனான நோவாக் ஜோகோவிச்சை அவர் 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

படத்தின் காப்புரிமை Getty

செர்பிய வீரரான ஜோக்கோவிச், கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக நான்காவது செட் ஆட்டத்தின்போது பயிற்சியாளர் இரண்டு முறை வந்து ரத்தம் வடிந்த அவருடைய கால் விரலுக்கு சிகிச்சை அளித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த போட்டியில் வாங்ரிங்கா வென்றிருப்பது மூலம் கிராண்ட் சலாம் போட்டியில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்றிருக்கிறார்.

முன்னதாக நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதி போட்டியில் ஜெர்மனியின் அன்ஜெலீக் கெர்பர், முதல்முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாடிய செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிலீஸ்கோவாவை வென்று கோப்பையை கைபற்றினார்.

தொடர்புடைய தலைப்புகள்