வாகன விபத்து: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர பிணையின் கீழ் விடுதலை

வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரவை பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு மஹார மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நுவன் குலசேகர

நேற்று மாலை கொழும்பு -கண்டி பிரதான வீதியில் உள்ள கிரில்லவேல பகுதியில் நுவன் குலசேகர ஓட்டி வந்த வாகனம் இரு சக்கர வண்டியொன்றில் மோதியதன் காரணமாக அதில் பயணித்த நபர் அந்த ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

அதன் பின்னர் போலீசார் நுவன் குலசேகரவை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை ஒரு லட்ச ரூபாய் பிணையின் கீழ் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக வழக்கு விசாரணை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்