இலங்கை: புதுக்குடியிருப்பு படுகொலை சம்பவத்தின் 26-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற படுகொலை சம்பவத்தின் 26-ஆம் ஆண்டு இன்று (புதன்கிழமை) உள்ளூர் மக்களால் நினைவு கூரப்பட்டது.

Image caption புதுக்குடியிருப்பு படுகொலை சம்பவத்தின் 26-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

1990-ஆம் ஆண்டு, இதே காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற படுகொலைச் சம்பவங்களில் ஒன்றாக ''புதுக்குடியிருப்பு படுகொலை -1990 '' மனித உரிமை ஆர்வலர்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றது.

Image caption நினைவு தினம் அனுசரிப்பு

மட்டக்களப்பு - கல்முனை சாலையிலுள்ள புதுக்கடியிருப்பு கிராமத்தில் 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதியில் பெண்கள் , குழந்தைகள் உள்பட 17 தமிழர்கள் கூரிய ஆயுதங்களினால் வெட்டியும், குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டனர்..

இந்த காலப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுதலைப்புலிகளினால் சில தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் எதிரொலியாக முஸ்லிம் ஊர்காவல் படையினரால் தமிழர்களுக்கு எதிராக சில தாக்குதல் நடை பெற்றதாக உள்ளூர் மக்களால் சந்தேகமும், குற்றச்சாட்டும் அவ்வேளயில் முன் வைக்கப்பட்டன.