வியாழனின் நிலவில் தண்ணீர் உள்ளதற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு: மேலும் ஆய்வு நடத்த திட்டம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வியாழன் கிரகத்தின் யுரோபா நிலவு

வியாழன் கிரகத்தின் மிகவும் குளிரான யுரோபா என்ற நிலவில், தண்ணீர் இருப்பதற்கான கூடுதல் ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த நிலவில் இருந்து விண்வெளியில் பெருமளவு தண்ணீர் கொட்டுவதாகவும், அதை நுண்ணுயிர் ஆய்வுக்கு உட்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அங்கு தண்ணீர் இருப்பதாக, டெலஸ்கோப் கருவியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் இருப்பதை முதலில் பார்த்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தண்ணீர் கொட்டும் பகுதிக்குள் விண்கலத்தைச் செலுத்தி, அதன் மாதிரிகளைச் சேகரித்து வந்து, அதிலுள்ள உயிர்த்தன்மை குறித்து ஆய்வு நடத்த முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

யுரோபா நிலவின் மேல் ஓட்டின் அடிப்பகுதியில் கடல்போன்று பெருமளவு தண்ணீர் வளம் இருப்பதாகவும், அது உயிர் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்