சர்வதேச சிறுமிகள் தினத்தையொட்டி பாலியல் வன்முறைக்கு எதிராக வவுனியாவில் பேரணி

சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தேசிய பிரச்சனையாகப் பிரகடனப்படுத்தி, குற்றவாளிகளுக்கு எதிராக, வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வவுனியாவில் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தப்பட்டுள்ளது.

Image caption தற்போது நடைபெறும் நல்லாட்சியில் பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பாக வாழும் சூழலை வெகுவிரைவில் ஏற்படுத்தித் தரப்படும் என நம்புவதாக மனு வழங்கப்பட்டுள்ளது

சிறுமிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டி இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

வடமாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு இதற்கன அழைப்பை விடுத்திருந்தது.

Image caption நீண்டகாலம் நிலுவையில் உள்ள பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு சட்டத்தரணிகள் அடங்கிய குழு அமைக்க கோரிக்கை

பாலியல் வன்முறை தொடர்பாக நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குளை விரைவாக விசாரணை செய்வதற்கு விசேட சட்டத்தரணிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட வேண்டும் என்பது உட்பட, பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளைத் தாங்கிய பெண்கள், அமைதியாக பேரணியில் சென்றனர்.

Image caption வட மாகாண பெண்கள் மாற்றத்திற்கான பரிந்துரை வலையமைப்பு இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது

வவுனியா போலிஸ் நிலையத்துக்கு அருகில் இருந்து ஆரம்பமாகிய இந்தப் பேரணி ஏ9 வீதி வழியாக வவுனியா கச்சேரியில் சென்று மனு கையளித்ததோடு முடிவடைந்தது.

Image caption சிறுமிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டி இந்தப் பேரணி நடைபெற்றது

ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட அந்த மனுவில் இந்த நல்லாட்சியில் பெண்களும் சிறுவர்களும் பாதுகாப்பாக வாழும் சூழலை வெகுவிரைவில் ஏற்படுத்தித் தரப்படும் என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்