முஸ்லீம் விவாக சட்டத்தில் மாற்றங்கள்: குழுவொன்றை நியமிக்க இலங்கை அமைச்சரவை அங்கீகாரம்

  • 26 அக்டோபர் 2016

இலங்கையில் முஸ்லீம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கு உப குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த வாரத்திற்கான அமைச்சரவை கூடியபோது, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைத்தார்.

இது தொடர்பாக அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையில் ''முஸ்லீம் சட்டத்தின் கீழ் திருமணம் முடிப்பதற்கான குறைந்த வயது எல்லை , மற்றும் அச் சட்டத்தின் கீழ் காணப்படும் வேறு காரணங்கள் தொடர்பாக காணப்படும் சட்ட விதப்புரைகள் இலங்கை அங்கம் பெறும் சில சர்வதேச சமவாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியம ஓழுக்கங்களுடன் ஓத்திசையாத காரணத்தினால் அந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவை ஏற்பட்டுள்ளது '' என கூறப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் முஸ்லீம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முறையான திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரைக்கு யோசனைகளை முன் வைப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்க நீதி அமைச்சருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்