கலாநிதி அமரதேவவின் உடலை சுமந்து சென்ற இலங்கை அதிபர் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமரதேவவின் உடலை சுமந்து சென்ற இலங்கை அதிபர் (காணொளி)

கொழும்பில் உள்ள மருத்துவமனையில் மாரடைப்பால் காலமான டபுள்யு.டி.அமரதேவவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைக்கப்பட்டது.

பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையிலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

இறுதி அஞ்சலி செலுத்த, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் சுதந்திர சதுக்கத்துக்கு வந்திருந்தார்.

எந்தவொரு நபரினதும் பூதவுடலை சுதந்திர சதுக்கத்தில் வைக்கப்படுவது, அவருக்கு வழங்குகின்ற மிக உயர்ந்த கௌரவமாகக் கருதப்படுகிறது.

இதன்படி, கலைஞர் ஒருவரது பூதவுடல் சுதந்திர சதுக்கத்தில் முழு நேரமும் அஞ்சலிக்காக வைக்கப்படுகின்ற முதலாவது நிகழ்வு இது என கூறப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்