இலங்கை: ஓய்வூதியம் கோரி போராடிய ஊனமுற்ற ராணுவத்தினர் மீது கண்ணீர் புகை பிரயோகம்

  • 7 நவம்பர் 2016

இலங்கைத் தலைநகர் கொழும்பில் , தங்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய ஊனமுற்ற ராணுவத்தினர் மீது போலீசார் இன்று கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டனர்.

Image caption ஓய்வூதியம் கோரி போராடிய ஊனமுற்ற ராணுவத்தினர்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சுமார் எட்டு நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊனமுற்ற ராணுவ அங்கத்தவர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Image caption ராணுவத்தினரின் போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் போலீஸார்

ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்ற போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிலர் பலவந்தமான முறையில் ஜனாதிபதி செயலகத்திற்கு நுழைய முயற்சித்ததன் காரணமாக கண்ணீர் புகை தாக்குதலை நடத்த நேரிட்டதாக போலீசார் தெரிவித்தனர். .

இதனிடையே, அடுத்த பிப்ரவரி மாதம் முதல் ஊனமுற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வாக்குறுதியின்படி தங்களது போராட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஊனமுற்ற ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்