பெண்களை மாலத்தீவிற்கு கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் இருவர் கைது

இலங்கை பெண்களை மாலத்தீவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு சந்தேக நபர்களை விளக்க மறியலில்வைக்குமாறு கடுவலை மேஜிஸ்ட்ரேட்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

கொழும்பு பத்தரமுல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

சந்தேக நபர்கள் சுமார் 100 க்கும் மேற்பட்ட இலங்கை பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக மாலத்தீவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் பெண் ஒருவருக்கு மாதாந்தம் 150000 முதல் பணம் வழங்கப்படுவதாகக் கூறிய அந்த பணியகத்தின் பேச்சாளர் இந்தச் சட்ட விரோத செயல்களுடன் சம்பந்தப்பட்ட சில மாலத்தீவு பிரஜைகளைக் கைது செய்வதற்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை எதிர் வரும் 21 ம் திகதி வரை விளக்க மறியலில்வைக்குமாறு கடுவலை மஜிஸ்ட்ரேட் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.